Friday, July 21, 2023

சென்னை எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் (SRM University) பெரும் முயற்சி செய்து, திருமூலர் ஆய்வு இருக்கை

வணக்கம்,
 
சென்னை எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் (SRM University) பெரும் முயற்சி செய்து, திருமூலர் ஆய்வு இருக்கை நிறுவப்பட்டுள்ளது.
 வள்ளலாரின் வாழ்வியல் கல்வி கற்க வாரீர்- முனைவர் வே.சுப்ரமணியசிவா அழைப்பு  

இதில் ஓகக்கலை ஆசான் திருமூலர் அருளிய திருமந்திரம் நூலில் கூறப்பட்டுள்ள தத்துவம், மருத்துவம், அறிவியல், வானியல், சமூகம், வாழ்வியல் நெறி உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை மக்கள்மயமாக்கும் நோக்கில் பாடத்திட்டங்களுடன் திருமந்திரம் சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகள் (Certificate and Diploma Course) கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டிற்கான (2023-2024) மாணவர் சேர்க்கை தற்போது நடைப்பெற்று வருகிறது.

இதில் இன்னொரு சிறப்பும் உண்டு, முதன் முதலாக வள்ளலாரின் வாழ்வியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய சன்மார்க்க கல்வியும் இந்த ஆண்டிலிருந்து கற்பிக்கப்படுகிறது.

வள்ளலார் வாழ்வியல் கல்வியில் தத்துவம், மருத்துவம், கல்வி, வானியல், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் கற்பிக்கப்பட இருக்கிறது. இதிலும் சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகள் (Certificate and Diploma Course) கற்பிக்கப்பட இருக்கிறது.
திருமந்திரம் மற்றும் வள்ளலார் வாழ்வியல் படிப்புகள் தனித்தனியாக கற்பிக்கப்படுகிறது.

சான்றிதழ் படிப்பு காலம் ஆறு மாதங்கள், இதற்கு 8-ஆம் வகுப்பு (அல்லது) அதற்கு மேல் கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். அதே போல் பட்டயப்படிப்பு காலம் ஓராண்டு ஆகும். இதற்கு 12-ஆம் வகுப்பு (அல்லது) அதற்கு மேல் கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படுகிறது.

எனவே மேற்சொன்ன கல்வி தகுதி பெற்றிருக்கும் அனைவரும் இப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
திருமூலர் மற்றும் வள்ளலார் கருத்துகளை கல்விக்கூடங்கள் வாயிலாக  மாணவர்களுக்கு கொண்டு செல்லும் அரிய முயற்சியை செய்திருக்கிறார்கள். இந்த முயற்சிக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 15-07-2023 அன்றே  இறுதி நாளாகும்.

எனவே திருமூலர் மற்றும் வள்ளலார் கருத்துகளை பரவ வேண்டும் எண்ணுவோரும் பரப்பிக் கொண்டிருபவர்களும், ஆர்வமுள்ளவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன் அடையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இது தமிழர் மெய்யியலை கற்கும் முயற்சிமட்டுமல்ல காக்கும் முயற்சியும்கூட என்பதை  நினைவில் கொண்டு செயல்படுவோம்.

மேலும் தகவலுக்கு 8825433773 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தோழமையுடன்
முனைவர் வே.சுப்ரமணியசிவா
வள்ளலார் ஆய்வாளர்

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Dr.T.Mahalakshmi
9, kalikundram main road
Kalikundram
Taramani
Chennai 600113
cell.8825433773
கட்டணம் செலுத்த வேண்டிய கைபேசி எண்(Gpay.No.)
8825433773

References;

வள்ளலாரின் வாழ்வியல் கல்வி கற்க வாரீர்- முனைவர் வே.சுப்ரமணியசிவா அழைப்பு
  1. https://youtu.be/VdWnzKnHyM0
  2. Application Form Links : https://drive.google.com/file/d/1WnQ8wFrdq0FgpHvEILNAkw2yxdhaReM_/view?usp=drive_link 

--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

வள்ளலார் விண்ணப்பம்.pdf

வள்ளலார் விண்ணப்பம்.pdf 

Wednesday, November 9, 2016

Deathless Education : சாகாக்கல்வி 2 Days sathvicharam on Thanjavur

---------- Forwarded message ----------
From: "Vallalar Groups" <vallalargroups@gmail.com>
Date: 10-Nov-2016 11:27 am
Subject: சாகாக்கல்வி 2 Days sathvicharam on Thanjavur
To: "Vallalar Groups" <vallalargroups@googlegroups.com>
Cc:

சாகாக்கல்வி 2 Days sathvicharam on Thanjavur

2 Days sathvicharam on Thanjavur

Topic சாகாக்கல்வி (please refer attachment)

Discussion :: Thiru.Thambaiah

Date.             : November 12,13( saturday , sunday)

Login time    ::12th nov 9.00am

Logout time :: 13th Nov 5.00pm

From Bangalore 20 people are going by train to attend that program..

Intetested persons can join with us. But person should be vegetarian.

No fees.food and accomadation will be provided by arutperunjothi trust

Venue Address::

Arutperunjothi Trust

(Agathiar alayam)

Thanjavur 613005

From: 2kms from thanjavur new bus stand

Monday, November 17, 2014

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புக்கான நிறைவு நாள் விழா - 2

வடலூரில் கடந்த ஒருவருடமாக நடைபெற்று வந்த வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி 
நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புக்கான தேர்வுகள் நிறைவு பெற்று தேர்ச்சிபெற்ற அன்பர்களுக்கு இரண்டாம் கட்டமாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர்கள் திரு.இராம. பாண்டுரங்கன்/ திரு.கே.பி. ஜோதி ஆகியோர் நிகழ்வில் கலந்தது கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள். 

30 க்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்கள் விழாவில் கலந்து கொண்டு சான்றிதழ்களை பெற்று கொண்டனர்.


வடலூரில் திருஅருட்பா பட்டயப்பயிற்சி

வடலூரில் திருஅருட்பா பட்டயப்பயிற்சி:

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக மாணவர்களுக்கான திருஅருட்பா பட்டயப்பயிற்சி நடைபெற்றது.

வடலூர் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர்கள் திரு.இராம. பாண்டுரங்கன்/ திரு.கே.பி. ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

அண்ணாமலை பல்கலையின் மேனாள் பேராசிரியர் முனைவர் திரு. நமச்சிவாயம் அவர்கள் வகுப்புகளை நடத்தி மாணவர்களுக்கு திருமுகப்பகுதி தொடர்பாக சிறப்பாக விளக்கம் அளித்தார்.

மாணவர்களுக்கு திருவடிப்புகழ்ச்சி பாடப்புத்தகம் வழங்கப்பட்டு பயிற்சி நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம்.

=========

Tiruarutpa diploma training for students - Vadalur:

For more details and to contact the following numbers.

Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com

Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com

Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com

For Online Help:

7411275938
anandhanl324@gmail.com

09840899581
ravikumarks@gmail.com

ஈரோடு திருவருட்பா சான்றிதழ்ப் படிப்பின் தேர்வு - நிறைவு - 16-11-2014

வடலூர் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஈரோடு கல்வி மையக் கிளையில் திருவருட்பா சான்றிதழ்ப் படிப்பில் பங்குகொண்ட 50 மேற்பட்ட மாணவர்கள் அதற்கான தேர்வை எழுதினார்கள்.

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் கேள்வித்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு தேர்வு துவங்கியது.

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், மேனாள் கல்விதுறை இணைஇயக்குனர் திரு. இராம. பாண்டுரங்கன் அவர்கள் தேர்வினை நேரில் பார்வையிட்டார்கள்.

ஈரோடு கல்வி மையக் கிளையின் பயிற்றுனர் திருமதி. பா. ராஜேஷ்வரி அம்மையார் தேர்வு கண்காணிப்பு மற்றும் உதவிப் பணிகளை மேற்கொண்டார்.

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பதிவாளர் திரு. பாலசுப்பிரமணியன் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.