Saturday, December 9, 2023

Collaboration request

Hi there

How would you like to earn a 35% commission for each sale for life by
selling SEO services

Every website owner requires the use of search engine optimizaztion (SEO)
for their websites. Think about it, this is really hot

Simply register with us, generate your affiliate links and incorporate them
on your websites, thats it.
It takes only a few minutes to set up everything and the payouts are sent
by each end of the month

Click here to sign up with us, totally free:
https://www.creative-digital.co/join-our-affiliate-program/

See you inside
Nehemiah

Friday, July 21, 2023

சென்னை எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் (SRM University) பெரும் முயற்சி செய்து, திருமூலர் ஆய்வு இருக்கை

வணக்கம்,
 
சென்னை எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் (SRM University) பெரும் முயற்சி செய்து, திருமூலர் ஆய்வு இருக்கை நிறுவப்பட்டுள்ளது.
 வள்ளலாரின் வாழ்வியல் கல்வி கற்க வாரீர்- முனைவர் வே.சுப்ரமணியசிவா அழைப்பு  

இதில் ஓகக்கலை ஆசான் திருமூலர் அருளிய திருமந்திரம் நூலில் கூறப்பட்டுள்ள தத்துவம், மருத்துவம், அறிவியல், வானியல், சமூகம், வாழ்வியல் நெறி உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை மக்கள்மயமாக்கும் நோக்கில் பாடத்திட்டங்களுடன் திருமந்திரம் சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகள் (Certificate and Diploma Course) கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டிற்கான (2023-2024) மாணவர் சேர்க்கை தற்போது நடைப்பெற்று வருகிறது.

இதில் இன்னொரு சிறப்பும் உண்டு, முதன் முதலாக வள்ளலாரின் வாழ்வியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய சன்மார்க்க கல்வியும் இந்த ஆண்டிலிருந்து கற்பிக்கப்படுகிறது.

வள்ளலார் வாழ்வியல் கல்வியில் தத்துவம், மருத்துவம், கல்வி, வானியல், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் கற்பிக்கப்பட இருக்கிறது. இதிலும் சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகள் (Certificate and Diploma Course) கற்பிக்கப்பட இருக்கிறது.
திருமந்திரம் மற்றும் வள்ளலார் வாழ்வியல் படிப்புகள் தனித்தனியாக கற்பிக்கப்படுகிறது.

சான்றிதழ் படிப்பு காலம் ஆறு மாதங்கள், இதற்கு 8-ஆம் வகுப்பு (அல்லது) அதற்கு மேல் கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். அதே போல் பட்டயப்படிப்பு காலம் ஓராண்டு ஆகும். இதற்கு 12-ஆம் வகுப்பு (அல்லது) அதற்கு மேல் கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படுகிறது.

எனவே மேற்சொன்ன கல்வி தகுதி பெற்றிருக்கும் அனைவரும் இப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
திருமூலர் மற்றும் வள்ளலார் கருத்துகளை கல்விக்கூடங்கள் வாயிலாக  மாணவர்களுக்கு கொண்டு செல்லும் அரிய முயற்சியை செய்திருக்கிறார்கள். இந்த முயற்சிக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 15-07-2023 அன்றே  இறுதி நாளாகும்.

எனவே திருமூலர் மற்றும் வள்ளலார் கருத்துகளை பரவ வேண்டும் எண்ணுவோரும் பரப்பிக் கொண்டிருபவர்களும், ஆர்வமுள்ளவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன் அடையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இது தமிழர் மெய்யியலை கற்கும் முயற்சிமட்டுமல்ல காக்கும் முயற்சியும்கூட என்பதை  நினைவில் கொண்டு செயல்படுவோம்.

மேலும் தகவலுக்கு 8825433773 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தோழமையுடன்
முனைவர் வே.சுப்ரமணியசிவா
வள்ளலார் ஆய்வாளர்

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Dr.T.Mahalakshmi
9, kalikundram main road
Kalikundram
Taramani
Chennai 600113
cell.8825433773
கட்டணம் செலுத்த வேண்டிய கைபேசி எண்(Gpay.No.)
8825433773

References;

வள்ளலாரின் வாழ்வியல் கல்வி கற்க வாரீர்- முனைவர் வே.சுப்ரமணியசிவா அழைப்பு
  1. https://youtu.be/VdWnzKnHyM0
  2. Application Form Links : https://drive.google.com/file/d/1WnQ8wFrdq0FgpHvEILNAkw2yxdhaReM_/view?usp=drive_link 

--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

வள்ளலார் விண்ணப்பம்.pdf

வள்ளலார் விண்ணப்பம்.pdf