Tuesday, September 23, 2014

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புக்கான நிறைவு நாள் விழா

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புக்கான நிறைவு நாள் விழா

மற்றும்

புதிய வகுப்புகள் தொடக்கம் தொடர்பான அறிவிப்பு:


வடலூரில் கடந்த ஒருவருடமாக நடைபெற்று வந்த வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி
நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புக்கான தேர்வுகள் நிறைவு பெற்று தேர்ச்சிபெற்ற அன்பர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

"வள்ளல் சீர் பரவுவார்" தவத்திரு ஊரன் அடிகள் நிகழ்வில் கலந்தது கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் இராம. பாண்டுரங்கன், கே. பி. ஜோதி ஆகியோர் நிகழ்வுக்கு முன்னிலை வகித்தனர்.

45 க்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்கள் விழாவில் கலந்து கொண்டு சான்றிதழ்களை பெற்று கொண்டனர்.

பல்கலைக்கழக மேனாள் பதிவாளரும், வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பதிவாளருமான திரு. பாலசுப்பிரமணியன், தேர்வுக்குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, மேனாள் தலைமை ஆசிரியர் கனசபை முதலானோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்,

தேர்வில் வெற்றிபெற்ற மாணவ அன்பர்களுல் முன்னதாக பூச நாள் அன்று வடலூர் பெருவெளியில் தொண்டும், சத்திய ஞான சபையில் "மாக மந்திரம் மெல்லென துதிக்கும் வழிபாடும் செய்தனர்".

விழாவின் நிறைவில் மாணவர்களின் சார்பாக வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

புதிய பட்டயப் படிப்புக்கான வகுப்புகள் தொடக்கம்:

வடலூரில் கடந்த ஒருவருடமாக நடைபெற்று வந்த வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புக்கான தேர்வுகள் நிறைவுற்றன.

இதைத்தொடர்ந்து பட்டயப் படிப்புக்கான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

வகுப்புகளின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது:

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள், இந்த பட்டயப்படிப்பில் சேரலாம்.

மாணவர்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்களுக்கான திருஅருட்பா பயிற்சி (சான்றிதழ் படிப்பு) பயிற்சிகளும் (இரண்டாம் தொகுப்பு) அக்டோபர் ஆறாம் நாள் தொடங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்கள் பெற:

Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com

Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com

Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com

Mr. Anandhan Loganathan
7411275938
anandhanl324@gmail.com

Er. J. Kathikeyan Jayapal
08971233966
karthikeyan.jayapal@gmail.com

 

No comments: