Monday, August 25, 2014

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புக்கான தேர்வுகள் நிறைவு மற்றும் புதிய வகுப்புகள் தொடக்கம் தொடர்பான அறிவிப்பு:


வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புக்கான தேர்வுகள் நிறைவு மற்றும் புதிய வகுப்புகள் தொடக்கம் தொடர்பான அறிவிப்பு:

வடலூரில் கடந்த ஒருவருடமாக நடைபெற்று வந்த வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புக்கான தேர்வுகள் நிறைவுற்றன.

45 க்கும் மேற்பட்ட சன்மார்க்க அனபர்கள் தேர்வில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் தேர்வு எழுதினார்கள்,

பல்கலைக்கழக மேனாள் பதிவாளரும், வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பதிவாளருமான திரு. பாலசுப்பிரமணியன், தேர்வுக்குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, மேனாள் தலைமை ஆசிரியர் கனசபை முதலானோர் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்,

பல்கலைகழக தேர்வு முறையின் படி அமைக்கப்பட்ட வினாத்தாள் அனைவருக்கும் வழங்கபட்டு 2.30 மணி தேர்வு நடைபெற்றது,

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர்கள் முனைவர் இராம. பாண்டுரங்கன், முனைவர் வை. நமசிவாயம் ஆகியோர் தேர்வு இடத்தை ஆய்வு செய்தனர்.

தேர்வில் வெற்றிபெற்ற மாணவ அன்பர்களுக்கு வரும் பூச நாள் அன்று சான்றிதழ்கள் வழங்கப்படும் என நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

புதிய வகுப்புகள் தொடக்கம்:

வடலூரில் கடந்த ஒருவருடமாக நடைபெற்று வந்த வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புக்கான தேர்வுகள் நிறைவுற்றன.

இதைத்தொடர்ந்து பட்டயப் படிப்புக்கான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

வகுப்புகளின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது:

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள், இந்த பட்டயப்படிப்பில் சேரலாம்.

மாணவர்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்களுக்கான திருஅருட்பா பயிற்சி (சான்றிதழ் படிப்பு) பயிற்சிகளும் (இரண்டாம் தொகுப்பு) விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்கள் பெற:

Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com

Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com

Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com

Mr. Anandhan Loganathan
7411275938
anandhanl324@gmail.com

Er. J. Kathikeyan Jayapal
08971233966
karthikeyan.jayapal@gmail.com

--
Regards,

வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவன தகவல் தொழில்நுட்பக்குழு. 

No comments: